புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை - மக்கள் குற்றச்சாட்டு

நீடாமங்கலம்,ஜன.22: சித்திரையூரில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்க வில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் வடபாதிமங்கலம் அருகில் உள்ள சித்திரையூரில் ஊராட்சி சபை கூட்டம் சைதாபேட்டை எம்எல்ஏ சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் செல்வோம்,மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற ஊராட்சி கூட்டம் நடத்தப்படும் என பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தார். இதையடுத்து  திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகில் உள்ள சித்திரையூர், பாலக்குறிச்சி, மஞ்சனவாடி உள்ளிட்ட ஊர்களில் கிராமசபை கூட்டம்  சென்னை முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை எம்எல்ஏவுமான .சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு,திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன்,மாவட்ட பிரதிநிதி செல்வம்,பொருளாளர் ஜெகஜீவன்ராம்,அவைத் தலைவர் அருண், வி.சி.கட்சியின் மாவட்டச் செயலாளர் இடிமுரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முதியோர் உதவித் தொகை இதுவரை வழங்கவில்லை. அடிப்படை வசதிகளான சாலை,மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்க வில்லை என கிராம மக்கள்  குற்றஞ்சாட்டினர்.

Related Stories: