செம்பனார்கோவில் குமரன் கோயிலில் தைப்பூச திருவிழா

செம்பனார்கோவில், ஜன.22: செம்பனார்கோவிலில் பிரசித்திபெற்ற குமரன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில்  9ம் நாளான முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தைப்பூசத்தன்று காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முக சுப்ரமணிய சாமிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலக நன்மைக்காக சண்முகார்ச்சனை நடந்தது.  தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் உள்ளிட்ட சுவாமிகள் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூம்புகார்: பூம்புகார் அடுத்த சாயவனேஸ்வரர் கோயிலில்  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேலையூர் செங்கழுநீர் விநாயகர் காவிரி படித்துறையில் இருந்து பல்வேறு காவடிகள் மற்றும் பால்குடங்கள் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து முருகனுக்கு பல்வேறு திரவியப் பொடிகள் மற்றும் பால், தேன் போன்றவைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரம் தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீதியுலா காட்சியும் நடைபெற்றது.

Related Stories: