சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 10 வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு துவக்கம்

சங்கரன்கோவில், ஜன. 22:    சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில்  எஸ்எஸ்எல்சி பொதுதேர்வு  எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகள் நேற்று (21ம் தேதி) தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.   இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ரவீந்திரன் நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் மார்ச் 2019 ல் எஸ்எஸ்எல்சி பொதுதேர்வில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நேற்று  தொடங்கியது. வரும்  25ம் தேதி வரை நடைபெறுகிறது. தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 5 நாட்களும் காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்தும், மாணவிகளுக்கு கரிவலம்வந்தநல்லூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் 5 நாட்களும் காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரையும் நடைபெறுகிறது. மேலும் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு செய்முறை பயிற்சி விவரங்களை தெரியபடுத்தவேண்டும், மேலும் தனித்தேர்வுகளுக்காக மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்த தேர்வர்களின் பெயர் பட்டியல் மின்னஞ்சல் முலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: