பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி

வீரவநல்லூர், ஜன. 22:  சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் சார்பாக “நெகிழி ஒழித்திட வளங்களை காத்திட” என்ற தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவிசங்கர், உதவி மேலாளர் மணிமாறன், துறை தலைவர் அந்தோணி வசந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பத்தமடை ராமசேஷிசியர் பள்ளி தமிழ் ஆசிரியர் விஜயபாரத் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து மாணவர்களிடையே கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் 200க்கும் மேற்பட்ட இயந்திரவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவர்கள் ரகுமான் மற்றும் மகேஷ் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை பேராசிரியர் ரங்கநாதன் செய்திருந்தார்.

Related Stories: