குறைதீர்நாளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் உத்தரவு

கரூர்,ஜன.22: குறைதீர்நாளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பொது மக்கள் வழங்கிய கோரிக்கை மனு வினை பெற்று கொண்டதோடு, மனுக்களை துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடி க்கை மேற்கொள்ள உத்தர விட்டார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் பகுதி மக்கள் வழங்கிய மனுவில், கரூர் - சேலம் பைபாஸ் சாலை பெரிய குளத்துப்பாளையம் அருகே ஒரு தனியார் சர்வீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. இதில், குறிப்பிட்ட ஸ்டேஷனில் வாகனங்களை கழுவிய பிறகு வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகிலேயே குளம் போல தேக்கி வைக்கப் பட்டுள்ளது. இதனை கண்காணித்து சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: