தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

தூத்துக்குடி, ஜன.22:தூத்துக்குடி ஆதிதிராவிடர் நல விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்காக புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பட்டறையினை கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், இப்பயிற்சியின் மூலம் மாணவியர்களிடையே உள்ள அச்சத்தை போக்கி திறமைகள் மேம்படுத்தப்படுகிறது. மாணவியர்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பதோடு, லட்சியத்தை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவியர்கள் இந்த பயிற்சி பட்டறையினை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தினமும் நாளிதழ்கள் படித்து அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் லட்சியத்தை அடைய விடா முயற்சியுடன் திறமைகளை வளர்த்துக்கொண்டு உயர்நிலையை அடையவேண்டும் என்றார்.

பின்னர் கலெக்டர், மாணவியர்கள் தங்கியுள்ள விடுதியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். அப்போது, மாணவியர்களின் கோரிக்கையான கணினி, தொலைக்காட்சி மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில்  திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அஷ்விதா, பிரவீணா, விடுதி வார்டன் கலைச்செல்வி மற்றும் மாணவியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: