ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடக் கோரி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை, ஜன. 22:  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட கோரிய வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அதிசயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஆலையை நிரந்தரமாக மூட இந்த நடவடிக்கை போதுமானதல்ல. அரசு கொள்கைரீதியாக முடிவெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தினர். இதை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கிளையின் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் ஆலையை திறக்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்ெகாண்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தெளிவான அரசாணை வௌியிடப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இதுபோன்று அரசாணை எதுவும் வெளியிடவில்லை. அரசு கொள்கைரீதியாக முடிவெடுக்க வேண்டுமென அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காற்று மாசு அதிகம் நிறைந்த நகரங்களில் தமிழகத்தில் தூத்துக்குடி இடம் பெற்றுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்து அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும்.

 இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக விசாரணையை பிப். 5க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: