எஸ்கேஎம் சித்தா,ஆயுர்வேத நிறுவனத்தின் வாழ்வியல் மேலாண்மை கருத்தரங்கம்

ஈரோடு, ஜன.18: ஈரோடு எஸ்கேஎம் ஆயுஷ் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வாழ்வியல் மேலாண்மைக்கான தேசிய கருத்தரங்கம் நாளை (19ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் நடக்கிறது. நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் எஸ்கேஎம் மயிலானந்தம் தலைமை வகிக்கிறார். ஈரோடு கலெக்டர் கதிரவன் முன்னிலை வகிக்கிறார். ஏவிபி ஆர்ய வைத்ய பார்மசி கௌரவ தலைவர் கிருஷ்ணகுமார் பங்கேற்கிறார். விழாவில் வேதாத்திரி மகரிஷி விருது சிறந்த ஆயுர்வேத மருத்துவர் நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பல புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தேசிய அளவில் சிறந்த 16 மருத்துவர்களின் பயிற்சி உரையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் ஆய்வு பதிவுகளும் இடம்பெறுகிறது. 20ம் தேதி மாலை பொதுமக்கள் பங்கேற்கும் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் மற்றும் பெண்களின் வாழ்வியல் முறை, இதர நல்வாழ்வுக்கான அறிவுரைகள் இடம்பெறுகிறது.

Related Stories: