எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

திருத்துறைப்பூண்டி, ஜன.18:   திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, நகர செயலாளர் சண்முகசுந்தர் மற்றும் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர அதிமுக சார்பில் காமராஜர் சிலை அருகில் நகர செயலாளர் சண்முகசுந்தர் தலைமையில் கட்சியினர் எம்ஜிஆர் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போன்று நகர, ஒன்றிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முத்துப்பேட்டை:   முத்துப்பேட்டையில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நேற்று ஒன்றிய செயலாளர் நடராஜன், நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியினர் பழைய பஸ் நிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Related Stories: