வடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா

மன்னார்குடி, ஐன.18:  வடுவூர் கோதண்ட ராமசுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கணு பிடிக்கும் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.   இக்கோயிலில் வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கணு புறப்பாடு நடத்தப் படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோதண்டராம சுவாமி கோயிலிருந்து சீதா தேவி தாயாரை கோயிலின் பின்புறம் உள்ள திருக்குளத்தில் எழுந்தருள செய்தனர். அங்கு சீதாதேவிக்கு பல்வேறு அபிஷேககங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடியின்றி நல வாழ்வு வாழ வேண்டியும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் பக்தர்கள் சீதாதேவி தாயாரிடம் பிரார்தித்து கணு பிடிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். தொடர்ந்து கோதண்டராம சுவாமி சீதாதேவி, லெட்சுமணன், அனுமன் சுவாமிகள் சமேதராக விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதான புகாரை சென்னை ஐகோர்ட் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Related Stories: