காணும் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம், ஜன. 18: அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல கிராமங்களில் பெண்கள் ஏரி கரைகளில் கரும்பால் பந்தலிட்டு நடுவில் வெல்லம் கலந்த அரிசி, தேங்காய், பழம் வைத்து நாச்சியார் அம்மனுக்கு பூஜை செய்து படைத்தனர். மேலும் பெண்கள் கூடி கும்மி அடித்து பாட்டுபாடி பூஜையிட்ட வெல்லம் கலந்த அரிசியை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.அப்போது மழை பொழிய வேண்டும், எல்லோரும் இன்புற்று வாழ பூமி செழிக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், அனைவரும் அமைதியுடன் வாழ வேண்டுமென பூஜை செய்தனர். காணும் பொங்கலையொட்டி கங்கைகோண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று வழக்கத்தை விட ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் தங்களது குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து குதுகலமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.

Related Stories: