₹30 லட்சம் மதிப்பில் சாலை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஜன.18:   கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது.

மேலும், சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்து சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சாலைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.  இதன்பேரில், கிருஷ்ணகிரி செங்குட்டுவன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சிதிலமடைந்து சாலைகளால் தினசரி ஆபத்து பயணம் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சாலை சீரமைப்பு பணிக்காக தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து செங்குட்டுவன் எம்எல்ஏ ₹30 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மேலும், சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: