வேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தில் பொங்கல் விழா போட்டிகள் மண்பாண்டம் பரிசாக வழங்கல்

வேதாரண்யம், ஜன.18: வேதாரண்யம் அருகே நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் போட்டிகளில் வெற்ற பெற்ற அனைவருக்கும் பரிசுகளாக மண்பாண்டங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் 3ம் ஆண்டு பொங்கல் தமிழ்புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு விழா கவிஞர் தமிழொளி தலைமையில் நடந்தது. தலை ஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெற்றிச்செல்வன், ஆசிரியர் சத்தியசிவம், வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் ஒளிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விளையாட்டு விழாவை ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுரு.பாண்டியன் தொடங்கி வைத்தார். வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமார், வானகம் அறங்காவலர் குமரவேல், விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் அம்பிகாபதி காலந்நடை டாக்டர் மீனாட்சிசுந்தரம், ஆசிரியர்கள் பாஸ்கரன் அனிதா, பலகுரல் கலைஞர் அன்புலவேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்வுகளில் பங்கேற்றோர் விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பரிசுகளாக மண்பாண்டங்கள் அளிக்கப்பட்டன.விழாவையொட்டி அரங்கில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பேராசிரியர் இலக்குவனார் ஆகியோரது படங்களை புலவர் தவமணி வெற்றியழகன் விவசாய சங்க நிர்வாகி கமேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.வாய்மேடு நம்மாழ்வார் நாற்றுப் பண்ணை சார்பில் மரக் கண்றுகள் அளிக்கப்பட்டன. இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் விஜயலெட்சுமி சிவாஜி ஏற்பாட்டில் 300 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தன.

Related Stories: