நாமக்கல், சேலம் வழியாக ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்

சேலம், ஜன. 18: நெல்லையில் இருந்து நாமக்கல், சேலம் வழி யே ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நெல்லை- ஜபல்பூர் (02193) இடையே நாளை(19ம் தேதி),26 மற்றும் பிப்ரவரி 2, 9,16,23, மார்ச் 2,9,16,23,30ம் தேதிகளில்(சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.  இந்த சிறப்பு ரயில், ெநல்லையில் இருந்து மாலை 4மணி க்கு புற ப் பட்டு, திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு ஜபல்பூருக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, நாக்பூர், நரசிங்பூர் வழியாக ஜபல்பூருக்கு செல்கிறது.

இதேபோல் கோவை- ஜபல்பூர்(02197)) இடையே வரும் 21, 28ம் தேதிகளில்(திங்கட்கிழமை) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கோவையில்  இருந்து  இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை காலை 10.20 மணிக்கு ஜபல்பூருக்கு  வந்தடையும்.எர்ணாகுளம்- ஐதரபாத் (07118) இடையே அடுத்த மாதம் 14,21,28ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு,  கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே அடுத்தநாள் இரவு 10.55 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.கொச்சுவேலி- ஐதரபாத் (07116) இடையே வரும் பிப்ரவரி 4, 18, 25ம் தேதிகளில் இயக்கப்படும், இந்த சிறப்பு ரயில், கொச்சுவேயில் இருந்து காலை 7.45மணிக்கு புறப்பட்டு, கோவை, ஈரோடு, சேலம் வழியே அடுத்தநாள் மதியம் 2மணிக்கு ஐதராபாத்தை அடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: