காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்

காரைக்கால், ஜன.18: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் 3ம் நாள் விழாவாக நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காரைக்கால் கடற்கரையில் ஏராளமானோர் குடும்பத்தோடு வருகை தந்திருந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் 50க்கு மேற்பட்ட கடலோரம் மற்றும் நகர போலீசாரும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், காரைக்கால்மேடு மீனவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது. சில இடங்களில் கடல் நீர் 30 மீட்டர்வரை உள் புகுந்து காணப்பட்டது. அதனால், போலீசார் மக்களை கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு சிலர் கரையை நோக்கி வந்த கடல் நீரில் கால்களை மட்டும் நனைத்து சென்றனர். கடற்கரையை ஒட்டியுள்ள பூங்காவில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று வேலை செய்யாததால், பூங்கா கலை இழந்து காணப்பட்டது. அதேபோல், குழந்தைகள் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டதால் அதுவும் கலை இழந்து காணப்பட்டது.

Related Stories: