குளித்தலை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை, ஜன.18: கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை நாகராஜன் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு விடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். லாலாப்பேட்டை, திம்மாச்சிபுரம், மகாதானபுரம், சித்தலவாய் போன்ற ஊர்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. மேலும் குளித்தலை, மருதூர், அய்யர்மலை, பஞ்சப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எதிர்பாராத விபத்து மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டால் கரூர் மற்றும் திருச்சி போன்ற மருத்துவமனைக்கு எடுத்து செல்ல நேரிடுவதால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிய நேரிடுகிறது.

மேலும் தற்போது குளித்தலை அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. இதேபோல் அருகேயுள்ள பஞ்சப்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதியில்லை. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி கரூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த இடத்தில், கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருவதால் தலைமை மருத்துவமனையை அனைத்து நவீன வசதியுடன் கொண்ட கருவியுடன் தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: