தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி திரளானோர் பங்கேற்பு

தோகைமலை, ஜன.18: தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலையில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 57ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக விராச்சிலேஸ்வரர், பிடாரியம்மன், கரையூரான் ஆகிய கோயில்களுக்கு சிறப்பு பூஜை செய்து வானவேடிக்கையுடன் கோயில் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர்.இதில் கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடி பிடிவீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து விராச்சிலேஸ்வரர் மற்றும் பிடாரி அம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. குளித்தலை எம்எல்ஏ ராமர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தங்ககாசு வழங்கினார்.இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மற்றும் வௌ்ளி காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் எஸ்பி தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories: