அதிமுகவினர் வெடித்த பட்டாசால் டூவீலர் நாசம்

தேனி, ஜன. 18: தேனி நேரு சிலை அருகே எம்ஜிஆர் பிறந்த நாளுக்காக அதிமுகவினர் பட்டாசு வெடித்ததில் பட்டாசு தீப்பொறி சிதறி அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் தீப்பற்றியது.தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா நேற்று தேனியில் அதிமுக, அமமுகவினர் கொண்டாடினர். நகரில் பல இடங்களில் இக்கட்சியினர் அவரவர் கொடிகளை அடையாளப்படுத்தி எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து விழா கொண்டாடினர்.

தேனி நேரு சிலைக்கு பின்புறம் அதிமுகவினர் சிறு பந்தல் அமைத்து, அதில் எம்ஜிஆர் உருவப்படம் அச்சிட்ட பிளக்ஸ் பேனர் வைத்து அதற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கும் விழாவிற்கு நகர அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வ்விழாவிற்கு தேனி மாவட்ட அதிமுக செயலாளர்

சையதுகான் வந்ததும், விழா தொடங்கியது. அப்போது, திடீரென அதிமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் நடுவே ஆயிரம்வாலா பட்டாசை

வெடிக்க வைத்தனர். பட்டாசு வெடிக்கும் என்பதை அறியாமல் அவ்வழியாக அரண்மனைப்புதூரை சேர்ந்த லோடுமேன் முத்துராஜ்(60) மோட்டார் சைக்கிளில் வந்தார். பட்டாசு திடீரென வெடித்ததும் அதிர்ச்சியுற்றவர் தடுமாறி கீழே விழுந்தார்.இதில் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் திறந்தது. அப்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததால் பட்டாசு தீ மோட்டார் சைக்கிளில் இருந்து கொட்டிய பெட்ரோலில் பட்டு வாகனத்தில் தீப்பற்றியது. உடனே சுதாரித்துக் கொண்ட லோடுமேன் மோட்டார் சைக்கிளில் இருந்து தாவி தப்பித்து சென்றார்.

அங்கே பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்திற்கு மத்தியிலும் அதிமுகவினர் லட்டுகளை வழங்கிக்கொண்டாடினர். தேனி நேருசிலை பின்புறம் ஆர்ப்பாட்டங்களோ,

விழாக்களோ, பந்தல் அமைத்து நிகழ்ச்சிகள் நடத்தவோ தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் அதிமுகவினருக்கு மட்டும் போலீசார் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதே இதுபோன்ற விபத்துக்கு காரணமாக மாறியது.

Related Stories: