சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறிய பின் தக்காளியைப் போட்டு, நன்கு மசியும் வரை வதக்கவும். அடுத்து அதில் சிக்கன் லிவரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் மூடி வைத்து 15 நிமிடம் லிவர் நன்கு வேகும் வரை வைக்க வேண்டும்.  இறுதியில் மூடியை திறந்து, கெட்டியாக வந்ததும் கொத்த மல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை ரெடி!