பல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்

திருவள்ளூர், ஜன. 18: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ‘பல்பு’ மாட்ட ஊராட்சி செயலாளர்கள் தவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள், 526 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியங்களிலும், தலா 7 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன. அவை எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.

பழுதான பல்புகளுக்கு பதில் புதிய பல்புகளை பொருத்த ₹50 மின் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் முன்வராததால் தனியார் வயர்மேன் மூலம் பொருத்த ஒரு கம்பத்திற்கு ரூ.100 வரை கேட்கின்றனர்.  குறைந்தபட்சம் 10 பல்புகளாவது மாற்ற அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். இதனால் 10 பல்புகள் பழுதாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.தவிர டீ, வடை, சாப்பாடு அனைத்தும் வாங்கித்தர வேண்டும். இந்த செலவுகள் எதையும் கணக்கு எழுத வாய்ப்பு இல்லை. கை பணத்தில் இருந்து செலவு செய்த பின் ஏதாவது ஒரு கணக்கில் எழுதி பில் எடுக்க வேண்டும்.  இதனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக ஊராட்சி செயலாளர்கள் புலம்புகின்றனர்.

Related Stories: