திருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா

திருத்தணி, ஜன. 18: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, மலைக்கோயிலில் இருந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருத்தணி மபொசி  சாலை அரக்கோணம் சாலை, அக்கயநாயுடு சாலை, காந்தி ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, பெரியதெரு வழியாக ஊர்வலமாக வந்தார்.அப்போது பெண்கள் வீடுகள் முன்பு கற்பூர ஆரத்தி காட்டி சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து ரெட்டி குளம் அருகில் உள்ள மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு பால், தேன் தயிர், பஞ்சாமிர்தம், வெட்டிவேர், ஏலக்காய், மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதியம்,  பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இரவு சுவாமி வீதி உலாவாக சென்று மீண்டும் மலைக்கோயில் அடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் ஜெய்சங்கர் இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் சுமை தாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: