வேப்பனஹள்ளியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.11:  வேப்பனஹள்ளியில் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில், எம்எல்ஏக்கள் பிரகாஷ் மற்றும் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.  வேப்பனஹள்ளியில் திமுக சார்பில் “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ரகுநாத் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று பேசினார். கூட்டத்தில், வேப்பனஹள்ளி, தளிகோட்டூர், அரியனப்பள்ளி, சின்னபொம்மரசனப்பள்ளி, பெரியபொம்மரசனப்பள்ளி, கோனேகவுண்டனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 அப்போது, தங்கள் கிராமங்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும், தளிகோட்டூர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை திறக்க வேண்டும். கோனேகவுண்டனூருக்கு பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏக்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து, உங்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றனர்.  இந்த கூட்டத்தில், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், நிர்வாகிகள் கருணாகரன், அன்பரசன், அகமத்பாஷா, சீனிவாசன், நரசிம்மன், நாராயணநாயுடு, பாஸ்கர், சம்சுதீன், நாகராஜ், சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: