திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம்

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி மாவட்டம் முழுவதும், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்து வருகிறது. பாலக்கோடு தெற்கு ஒன்றியம் எர்ரனஅள்ளி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில்,  மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, ரவிச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் பிகே முரளி, வழக்கறிஞர் அணி பிகே முருகன், வெங்கடாசலம், ரவி, ஊராட்சி செயலாளர் அழகுசிங்கம், வழக்கறிஞர் மணி, செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மோட்டுப்பட்டியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு, பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன் கலந்து கொண்டு, மக்களிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை, தேவைகளை கேட்டறிந்தார். இதில், ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், பேரூர் செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன், மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மடம் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.துறிஞ்சிப்பட்டியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி துணை தலைவர் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்மணி கலந்து கொண்டார். ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டு, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என, கட்சி பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு, பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், பி.பள்ளிப்பட்டி, பையர்நத்தம், போதக்காடு பகுதிகளிலும் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

Related Stories: