சட்ட விழிப்புணர்வு பிரசாரம்

அரியலூர், ஜன. 11: அரியலூர் மாவட்டம் வாரணவாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட அமர்வு நீதிபதி சுமதி தலைமை வகித்து பேசுகையில், பெண் குழந்தைகள் வரைமுறைக்கு உட்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். பெண் குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பொதுமக்கள் பிரச்னைகள் என்றவுடன் காவல் நிலையம் மற்றும் கோர்ட் என்று செல்லாமல் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் சென்று உங்கள் பிரச்னைகளை கூறினால் அவர்கள் உங்களுக்கு எவ்விதத்தில் உதவ முடியும் என்று ஆலோசனை வழங்குவர். தேவையெனில் இலவசமாக நீதிமன்றத்தில் வழக்காட  வழக்கறிஞர்’ நியமித்து தருவார்கள். இதற்கு கட்டணம் கிடையாது என்றார். மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சரவணன், பார் அசோசியேஷன் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் மணிகண்டன், வழக்கறிஞர் சங்க தலைவர் செல்வராஜ், ஜெயக்குமார், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சுப்பையா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: