காலமுறை ஊதியம் வழங்ககோரி அரியலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜன. 11: நீதிமன்ற உத்தரவின்படி அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம நடந்தது. மாவட்ட தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். வட்டார செயலாளர் அனிதா கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில தலைவர் கோபிநாதன், மாநில துணை தலைவர் கலைச்செல்வி சிறப்புரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்று 8 மாதமாகியும் இன்னமும் விடுவிக்காத செவிலியர்களை உடனே பணிமாறுதல் இடத்தில் சேர ஆவண செய்ய வேண்டும். செவிலியர் பற்றாக்குறை என்ற பெயரில் பணிச்சுமையை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும். எம்ஆர்பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  சுகாதார ஆய்வாளர் வகில், விக்டோரியா, மணிமேகலை, மறைத்தென்றல், மாவட்ட செயலாளர் விஜயசாந்தி மற்றும் 100க்கும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: