பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

பெரம்பலூர், ஜன.11:  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி நடந்த நிகழ்ச்சிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நிறுவனர், தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ரவிக்குமார் வாழ்த்திப் பேசினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்களும் இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் கலந்துகொண்டனர். விழாவில் தமிழர் பாரம்பரிய நடனமான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் முளைப்பாரி எடுத்து மாணவர்கள் ஊர்வலமாக வந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.அதோடு கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கும்மியடித்தல், ஏர் பூட்டுதல், காளைகளுக்கு பொங்கல் சோறு ஊட்டுதல் என களைகட்டியது. மாணவ, மாணவியர் பொய்க்கால் குதிரை நடனம் ஆடினர். விழாவையொட்டி செங்கரும்பு தோரணம்கட்டி, பொங்கல் பானை வைத்து சமைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

Related Stories: