மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் சங்கத்தினர் சாலை மறியல்

திருப்பூர், ஜன.11:மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் சங்கத்தினர் நேற்று தலைமை தபால் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான தகுதி மற்றும் உச்ச வரம்பை நீக்கிட வேண்டும், பணிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், 8 மணி நேர வேலைக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கிட வேண்டும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க வேண்டும், விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் கட்டுபடுத்த வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கிட வேண்டும்  என கோரிக்கைகளை வழியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் எஸ்.கர்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.காளிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.பி.தாமோதரன், மாவட்ட தலைவர் எஸ்.ராஜா, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், கே.மகேஷ் குமார், எஸ்.டி.அன்பரசன், பி.ராமர், ஆர்.கார்த்திக், அழகு ராஜா, எஸ்.சதிஷ் மற்றும் மாநகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட  300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டவர்களை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இவர்களை, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: