பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம், ஜன. 11:  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம்.   இங்கு நடைபெறும் குண்டம் தேர்த்திருவிழாவிற்கு தமிழகத்தில் ஈரோடு, கரூர், கோவை திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

 இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து 7ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.இதில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று அதிகாலை நடக்கிறது. இவ்விழாவிற்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories: