இடதுசாரிகள், விசிக நாளை ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜன. 11: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் போட்டி அரசாங்கம் நடத்தும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை வெளியேற்றக் கோரியும், மாநில அந்தஸ்து வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் பிரசார இயக்கங்களை 80 இடங்

களில் நடத்தினோம். கம்பன் கலையரங்கில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இதனால் கிரண்பேடி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனை பொறுக்க முடியாத கிரண்பேடி, கம்யூனிஸ்டுகள் மீது திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை பரப்பி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சியினர் பணம் பெற்றுக் கொண்டு போராட்டம் நடத்துவதாக தனக்கு யாரோ ஒருவர் அனுப்பியதை கவர்னர் வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். இதற்கு நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இதற்கு கவர்னர் கிரண்பேடி தான் சாட்சியமாக இருக்க வேண்டும்.

மேதகு என்ற வார்த்தைக்கு தகுந்தவராக கிரண்பேடி இல்லை. அவரது செயல்பாடுகளும் அதற்கு பொருத்தமானதாக இல்லை. கம்யூனிஸ்ட்களின் வரலாறு தெரியாமல் கிரண்பேடி பேசுகிறார். கம்யூனிஸ்டுகள் பெற்றுத்தந்த சுதந்திரத்தின் மீது தான் கவர்னராக கிரண்பேடி உள்ளார். எனவே அவதூறு பரப்பியதற்கு கவர்னர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., லெனினிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் ஒன்றிணைந்து நாளை (12ம் தேதி) காலை சட்டமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ராஜ்நிவாஸ் டீம், ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி விட்டது. கவர்னர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் பலகட்ட போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, இந்திய கம்யூ., துணை செயலாளர்கள் கீதநாதன், அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் அமுதவன், செல்வநந்தன், மணிமாறன், லெனினிஸ்ட் கம்யூ., மோதிலால் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: