புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசார பயணம்

புதுச்சேரி, ஜன. 11: புதுவையில் பிளாஸ்டிக், ரப்பர், டயர் எரிப்பதால் வரும் புகையால் சுவாச கோளாறு, இருதய கோளாறு, நரம்பு பாதிப்பு, கண் எரிச்சல், புற்றுநோய், ஆஸ்துமா, அமிலமழை ஏற்படுகிறது. இதனால் புகையில்லா போகி கொண்டாடுவோம். சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்போம் என்பதை வலியுறுத்தி முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த சட்டப்பணிகள் ஆணைய தன்னார்வலர் ஆனந்தன் உள்ளிட்ட 4 பேர், புதுவையில் இருந்து காரைக்காலுக்கு விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரசாரத்தை நேற்று காலை தொடங்கினர். அண்ணா சிலை ஒதியஞ்சாலை காவல்நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட பிரசார பயணத்தை புதுவை அரசின் சுற்றுச்சூழல் துறை பொறியாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். காரைக்கால் வரை 3 நாள் பிரசார பயணம் நடக்கிறது.

Related Stories: