கன்னியாகுமரி அருகே தொழில் அதிபரை தாக்கி காரில் கடத்தல் திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

கன்னியாகுமரி, ஜன.11: கன்னியாகுமரி அருகே ஷேர் மார்க்கெட் முதலீட்டு நிறுவன அதிபரை தாக்கி காரில் கடத்திய திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் மந்தாரம்புதூரை சேர்ந்தவர் முகமதுெஷரீப் (50). இவர் நாகர்கோவில் இடலாக்குடியில் பங்கு முதலீட்டு (ஷேர் மார்க்கெட்) நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் திருச்சியை சேர்ந்த சிலர் முதலீடு செய்தனர். இந்நிலையில் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நிதியிழப்பு ஏற்பட்டதால் முதலீடு செய்தவர்களுக்கு உரிய பங்கு தொகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பண பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் காலை திருச்சியை சேர்ந்த 8 பேர் காரில் வந்து மந்தாரம்புதூரில் உள்ள முகமது ஷெரீப் வீட்டில் புகுந்து ஷெரீப் மற்றும் அவரது தாயார், மனைவி, மகள் தாய்யா  ஆகியோரை அடித்து உதைத்து முகமதுஷெரீப்பை காரில் கடத்தி சென்றுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக முகமதுஷெரீப்பின் மகள் தாய்யா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் திருச்சியை சேர்ந்த அல்ரிச் பிரேமகுமார், ராஜீ, கார்த்தி, சின்னதம்பி, பரத்குமார் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் திருச்சி விரைந்து 4 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் முகமதுஷெரீப் மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: