வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்: விதிகளை மீறி பிளாஸ்டிக் பறிமுதல் செய்தால் போலீசில் புகார்

வேலூர், ஜன.11: வேலூர் கிருபானந்தவாரியார் சாலை சண்முகனடியார் சங்க கட்டிடத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் வினோத்குமார், தின்பண்ட உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமு, அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் அருண்பிரசாத், செயலாளர் பாபுஅசோகன் முன்னிலை வகித்தனர். இன்று(நேற்று) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு நீதிமன்றம் தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர பிற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வணிகர்களை துன்புறுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர, தடை செய்யப்படாத பொருட்களையும் அள்ளிச் செல்கின்றனர். இனியும் சட்டத்திற்கு விரோதமாக கடைகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் 14 பிளாஸ்டிக் பொருட்களை தவிர பிற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தால், வணிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தால், வணிகர் சங்கம் மூலமாக போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: