தியாகனூரில் புத்தர் சிலை தியான மண்டபத்தை சீரமைக்க கோரிக்கை

ஆத்தூர், ஜன.10: தலைவாசல் அருகே தியாகனூரில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை வயல் வெளியில் கேட்பாரற்று கிடந்தது. அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் அந்த புத்தர் சிலையை எடுத்து தியான மண்டபத்தை கட்டி அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையில் கட்டினார். தற்போது அந்த மண்டபம் முறையான பராமரிப்பு இல்லாமல், மாடிக்கு செல்லும் படிகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும், தியான மண்டபத்திற்கு செய்யப்பட்டுள்ள மின் இணைப்பு சுவிட்ச்கள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி உள்ளன. அந்த தியான மண்டப வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணறும் முறையாக பராமரிக்கப்படாமல் கால்நடைகள் கட்டும் இடமாக உள்ளூர் வாசிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதனை முறையாக பராமரிக்கவும் தியான மண்டப வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா ஒன்றை அமைத்து ஊராட்சி பராமரிப்பின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: