பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துதல் பயிற்சி

ஆட்டையாம்பட்டி, ஜன.10:  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அரிமா சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், விதைகள் அறக்கட்டளை சார்பில், 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் வரும் பொதுத்தேர்வை பயமின்றி எழுதும் வகையில் ஊக்கப்படுத்தும் பயிற்சி முகாம் வேலநத்தத்தில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சாசனத் தலைவர் ஜனார்த்தன், ராமலிங்கம், சந்திரசேகரன் தொடங்கி வைத்தனர். பயிற்சியாளர்கள் அசோக், கவுதம், நந்தகுமார், மகேஸ்வரி உள்ளிட்டோர் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது பற்றி மாணவர்களிடையே பேசினர். நல்ல நட்பு, பழக்க வழக்கம், இரவு படுக்க செல்வதற்கு முன் என்ன படித்தோம், டிவி, மொபைல் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது போன்ற பல்வேறு தகவல்களை விளக்கி கூறினர். மாணவ, மாணவிகளும் அவற்றை குறிப்பெடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: