மாவட்டம் முழுவதும் திமுக ஊராட்சி சபை கூட்டம் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நாமக்கல், ஜன.10: நாமக்கல் அருகே திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டங்களில், ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நாமக்கல் கிழக்கு   மாவட்ட திமுக சார்பில், நேற்று முத்துக்காப்பட்டி, பழையபாளையம், கரியபெருமாள்கோயில், போடிநாயக்கன்பட்டி ஆகிய 4 ஊராட்சிகளில், ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மினி பஸ் இயக்கப்பட்டது. ஆனால், அதிமுகவினர் இந்த திட்டத்தையே முடக்கிவிட்டனர். இதனால் கிராமப்புற மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்,’ என்றார்.

கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், கவுதம், பழனிவேல், மாவட்ட துணை செயலாளர் விமலா, நகர திமுக பொறுப்பாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொள்ள ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இதேபோல், பள்ளிபாளையம் ஒன்றியம் பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில், ஊராட்சி சபை கூட்டம் ஈரோடு தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.  கூட்டத்தில், நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சேகர், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், நகர செயலாளர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன், நிர்வாகிகள் ரவிமோகன், வேல்முருகன், இளங்கோ, ரமேஷ், ராதாகிருஷ்ணன், ஜெயகோபி, வினோத், ஷெரிப், வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள மானத்தி, வேலகவுண்டம்பட்டி மற்றும் புள்ளாக்கவுண்டம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தன. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்தார். மக்கள் பிரசனைகளுக்கு தீர்வுகாணாத அதிமுக அரசை கண்டித்தும் அவர் பேசினார். இந்த கூட்டங்களில் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், விவசாய அணி துணை அமைப்பாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி வேலுசாமி, ஊராட்சி செயலாளர் ராமசாமி, புத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜூ  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: