ரூ.16.59 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

வெள்ளக்கோவில், ஜன.10:வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 17,182 கிலோ கொப்பரை ரூ. 16 லட்சத்து 58 ஆயிரத்து 993 ரூபாய்க்கு விற்பனை நடந்தது .  திண்டுக்கல், திருப்பூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் 40 பேர் 342 மூட்டை கொப்பரைகளை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு  விற்பனைக்கு   கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர்  மாரியப்பன் முன்னிலையில் முத்தூர்,  வெள்ளகோவில், காங்கயம் பகுதி எண்ணெய்  ஆலை உரிமையாளர்கள் 9 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் தரமான முதல் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.121.65க்கும், 2ம்தரம் ஒரு கிலோ ரூ.59.05க்கும் ஏலம் நடைபெற்றது.

Related Stories: