அவிநாசியில் ரூ. 39 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி,ஜன.10:அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 2200 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.ஏலத்தில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5100 முதல் ரூ.5640 வரையிலும், டி.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,200 முதல்ரூ.6,825 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 முதல் ரூ.4,500 வரையிலும் ஏலம் போனது. பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.38 லட்சத்து 40 ஆயிரத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

Related Stories: