58 கிராம கால்வாய் தண்ணீர் வரவில்லை

உசிலம்பட்டி, ஜன. 10: உசிலம்பட்டி அருகே, கல்லூத்து ஊராட்சி, மகாலிங்காபுரத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் சுதந்திரம், நகரசெயலாளர் தங்கமலைப்பாண்டி, சேடபட்டி ஒன்றியச் செயலாளர் ஜெயச்சந்திரன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் சுதாகரன், எழுமலை பேரூர் கழக செயலாளர் ஜெயராமன், முன்னாள் துணைச்சேர்மன் சின்னப்பாண்டி, மாவட்ட மீனவரணி செல்வபாண்டி, ஊராட்சி கிளைச்செயலாளர் ராமசாமி உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம், நல்லொச்சான்பட்டி, முத்துவீரன்பட்டி, பாறைப்பட்டி, கலியாணிப்பட்டி, பெருமாள்பட்டி, கல்லூத்து கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கூறிய புகார்கள் வருமாறு: நல்லொச்சான்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தில் விரிசல், மயானத்தில் அடிப்படை வசதியில்லை.  பெருமாள்பட்டியில் 100 வேலை திட்டத்தில் முறைகேடு, 58 கிராமக் கால்வாய் தண்ணீர் வரவில்லை. சாலை ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்து கூறினர். மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறுகையில், ‘பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வோம். திமுக அரசு அமைந்த பின்பு பொதுமக்களின் குறைகள் முழுமையாக தீர்க்கப்படும்’ என்றார்.

Related Stories: