வீட்டை விட்டு ஓடி வந்து திண்டுக்கல் ஜங்சனில் தவித்த 4 மாணவர்கள் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

திண்டுக்கல், ஜன. 10: வீட்டை வீட்டு ஓடி வந்து திண்டுக்கல் ரயில்நிலையத்தில் தவித்த 4 மாணவர்களை மீட்டு ரயில்வே போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் ரயிநிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 4 மாணவர்கள் செய்வதறியாது அங்குமிங்கும் திரிந்தனர். இதை கவனித்த ரயில்வே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் மதுரை கே.புதூரை சேர்ந்த நாகராஜ் மகன் கவின்குமார் (16). இவரது நண்பர்கள் குணா (16), சந்தோஷ் (16). பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கவின்குமார் பாலிடெக்னிக்கிலும், சந்தோஷ் ஐடிஐயிலும், குணா 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கவின்குமார் வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் நண்பருக்காக மற்ற 2 பேர் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி 3 பேரும் மதுரையில் இருந்து இன்டர்சிட்டி ரயிலில் திண்டுக்கல் வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் பெற்றோர்களை வரவழைத்து 3 பேரையும் ஒப்படைத்தனர்.இதேபோல் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ஒலி மகன் முகமது அபீன் (12). இவர் தஞ்சாவூர் வடகரையில் உள்ள பள்ளியில் தங்கி உருது படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளியை விட்டு வெளியேறி தனது ஊருக்கு செல்வதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் வந்தார். திண்டுக்கல் ரயில்நிலையம் வந்ததும் இறங்கி எங்கே செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் இவரது பெற்றோரையும் வரவழைத்து ஒப்படைத்தனர்.

Related Stories: