ஒட்டன்சத்திரம் பகுதியில் புகையிலை செடி விளைச்சல் அமோகம்

ஒட்டன்சத்திரம், ஜன. 10: பருவமழை ஓரளவுக்கு பெய்ததால் ஒட்டன்சத்திரம் பகுதியில் புகையிலை செடி விளைச்சல் அமோகமாக உள்ளது.ஒட்டன்சத்திரம் அருகே நாகணம்பட்டி, சங்குபிள்ளைபுதூர், காப்பிலியபட்டி, மூனூர், பெரியகோட்டை, நாகப்பன்பட்டி, குளிப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட புகையிலையை சுமார் 20 நாட்கள் காய வைத்து வியாபாரிகளிடம் விற்கின்றனர். இங்கு விளையும் புகையிலை மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஒரு ஏக்கரில் விளைந்த புகையிலை ரூ.7000 முதல் ரூ.8000 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த பருவமழை ஓரளவுக்கு பெய்ததால் இந்தாண்டு விளைச்சல் அதிகரிப்பதுடன் நல்ல விலையும் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: