போலியோ சொட்டு மருந்து பயிலரங்கம்

புதுச்சேரி, ஜன. 10:  மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடப்பு ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி 3ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ளது. போலியோ முகாம் அன்று புதுச்சேரி மாநிலத்தில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு 452 மையங்களில 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ஆயத்த ஏற்பாடுகளின் தொடர்ச்சியாக மாநில அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த பயிலரங்கம் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்தது.

 சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் மற்றும் களப்பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போலியோ சொட்டு மருந்து முகாமினை வெற்றிகரமாக செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி கிளப் பங்களிப்புடன் புதுவை அரசின் வழிகாட்டுதலின்படி போலியோ சொட்டு மருந்து முகாம் புதுவை மாநிலம் முழுவதும் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்தார்.

Related Stories: