உணவில் கலப்படத்தை கண்டறிய பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

கோவை, ஜன. 9: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பொருட்களில் கலப்படம் கண்டறியவது குறித்த பயிற்சி செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.   கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் 148 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கலப்படம் உணவை கண்டறிவது தொடர்பான பயிற்சி வழங்க உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 23 உணவு பாதுகாப்பு அலுவலர்களின் மூலம் வட்டார பகுதிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் 4 மாணவர்களுக்கு எளிய முறையில் உணவில் கலப்படம் கண்டறிதல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது வரை மொத்தம் 113 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 நேற்று கோவை செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் உணவுத்துறை அதிகாரிகள் கலப்பட உணவு கண்டறிதல் குறித்து பயிற்சி அளித்தனர். இதில், தரமற்ற உணவு பொருட்களை அடையாளம் காணுதல், சாயம் கலந்த உணவு பொருள், உணவு பொருள் பாக்கெட்டில் ஒட்டியிருக்கும் லேபிள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும், மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தரமான உணவு பொருள், கலப்பட உணவு பொருள் இடம்பெற்ற கண்காட்சியும் நடத்தப்பட்டது.’

Related Stories: