அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.9: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.வரி விதிப்பை நீக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் குமார், ஓய்வுப்பெற்ற ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: