வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவுதாரர்களுக்கு 36 மாதங்கள் உதவித்தொகை

திண்டுக்கல், ஜன. 9: கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டு ஆனவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 36 மாதத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகும் வேலை கிடைக்காதவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன்படி பத்தாம் வகுப்பு தோல்வி முதல் பட்டதாரிகள் வரை ரூ.200 முதல் ரூ.600 வரை வழங்கப்படுகிறது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.ஆயிரம் வரை உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே கடந்த டிசம்பர் 31 வரை ஐந்து ஆண்டுகள் முடிந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ஓராண்டு நிறைவு செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இத்தொகை பெற ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 45வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரம்.மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள் நேரில் வந்து விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்து பிப்.28க்குள் அளிக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: