மாவட்டம் முழுவதும் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.9: ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து,  நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்லில் மருந்து வணிகர் சங்கம் சார்பில் நேற்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆன்லைன்  மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். போலி மருந்துகளுக்கான அனுமதியை ஊக்குவிக்ககூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர்  தெய்வமணி, நிர்வாக செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர்  மேகநாதன், பொருளாளர் சுப்ரமணி மற்றும் ஏராளமான மருந்து வணிகர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர். பின்னர், மாநில அமைப்பு  செயலாளர் அன்பழகன் தலைமையில், மருந்து வணிகர்கள் மாவட்ட கலெக்டர்  ஆசியா மரியத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே அகில இந்திய மருத்துவ  சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் திருச்செங்கோடு கிளை  சார்பில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து  கொண்டனர். பின்னர், திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று, மண்டல  துணை தாசில்தார் கார்த்திகேயனிடம் மனு கொடுத்தனர். குமாரபாளையம்: ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கக்கோரி குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மருந்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். தொடர்ந்து தாசில்தார் ரகுநாதனிடம் மனு கொடுத்தனர். இதில் சங்கத்தின் செயலர் செந்தில், பொருளாளர் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அண்ணா சிலை அருகே, தாலுகா மருந்து வணிகர்கள் சங்கத்தலைவர் அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் சுந்தரசுப்ரமணியம், செயலாளர் முனியாண்டி, பொருளாளர் அன்பு மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆன்லைன் மருந்து வணிகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

 பின்னர், தாசில்தார் ருக்குமணியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Related Stories: