மாவட்டத்தில் தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுசூழல் மாவட்ட பொறியாளர் சிவருத்ரப்பா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

எனவே தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வைத்திருந்தால் அவற்றை பாதுகாப்பாக உள்ளாட்சி அமைப்புகளிடமும், பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடமும் ஒப்படைக்கலாம்.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தர்மபுரி மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: