வாகனம் ேமாதி தொழிலாளி பலி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல் பெரியாத்துக்குறிச்சியில் பரபரப்பு

அரியலூர், டிச. 25:ஆண்டிமடம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெரியாத்துக்குறிச்சியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சியை சேர்ந்த ெதாழிலாளி கோவிந்தசாமி (29). இவர் சொந்த வேலை விஷயமாக ஆண்டிமடம் செல்வதற்காக விருத்தாச்சலம்- ஆண்டிமடம் ரோட்டில் ராங்கியம் அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கோவிந்தசாமியின் தந்தை பரமசிவம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோவிந்தசாமியின் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆண்டிமடம்- விருத்தாச்சலம் மெயின்ரோடு பெரியாத்துக்குறிச்சி கிராமத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிந்தசாமியின் இறப்பில் மர்மம் இருக்கிறது. ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட கொலையாளியை கைது செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்றனர். அதற்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மக்கள் மறியல் போராட்டத்தால் ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: