ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மன்நிவாரணம் வழங்குவதில் பாதிப்பு கற்பகநாதர்குளம் காலனி பகுதியில் நிரந்தர சுனாமி கட்டிடம் கட்டி தர வேண்டும்

திருவாரூர்,  டிச.12: கற்பக நாதர் குளம் காலனிக்கு பகுதிக்கு நிரந்தர சுனாமி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் ஊராட்சிக் குட்பட்ட கற்பகநாதர் குளம் காலனி, இடும்பாவனம் காலனி ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் ஊராட்சிக் குட்பட்ட கற்பகநாதர் குளம் காலனி, இடும்பாவனம் காலனி ஆகிய இரு கிராமங்களில் சுமார் 1200க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் வசிக்கிறோம்.கடந்த மாதம் 15ம் தேதி வீசிய கஜா புயலால் தங்களின் குடிசை வீடுகளும் தரை மட்டம் ஆகிவிட்டதால் கிராம மக்கள் அனைவரும் கற்பகநாதர் குளம் காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  அரசின் சார்பில் அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு முகாமில் தங்கியுள்ளோம். மேலும் தற்போது முகாம் அமைக்கப்பட்ட பள்ளியில் வகுப்புகள் நடைபெறுவதால் பகல் நேரங்களில் சாலையோரங்களில் தங்கி விட்டு இரவு நேரங்களில் மட்டும் அப்பள்ளியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறியுள்ள அப்பகுதி மக்கள் இவற்றிக்கு தீர்வாக கற்பகநாதர் குளம் காலனி பகுதியில் அரசின் சார்பில் நிரந்தர சுனாமி கட்டிடம் ஒன்றை கட்டி தர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம மக்கள் கோரிக்கைனை வட்ட கிளை தலைவர் கனகராஜன், செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாவட்ட பொருளாளர் சற்குணம், வட்ட துணை  தலைவர் ஜெரால்டு ராஜ்குமார், துணை செயலாளர் வீரசேகரன்  ஆகியோர் பேசினர்.20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி விஏஓ சங்கத்தினர் கடந்த இரண்டு நாட்களா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: