மீன்வளக்கல்லூரியில் கருத்தரங்கு

தூத்துக்குடி, டிச.11:  தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மண்வள தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நீர்வள சூழலியல் மேலாண்மைத்துறை சார்பில் மண் மாசுபடுவதை தவிர்த்தல் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.

இதன் துவக்க விழாவில், நீர்வள சூழலியல் மேலாண்மைத்துறை தலைவர் பத்மாவதி வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தனது தலைமை உரையில் மண் வள தினத்தின் முக்கியத்துவம் மற்றும் மீன்வளர்ப்பில் மண் வளத்தின் பங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மீன்வளர்ப்புத் துறையின் தலைவர் ஆதித்தன் தனது கருத்துரையில் மண் வளத்தையும் அதை சார்ந்த தொழில் நுட்பங்களையும் அதன் செயல்முறை விளக்கங்களையும் எடுத்துரைத்தார்.

மேலும் நீர் வளச்சூழலியல் மேலாண்மைத் துறையின் பேராசிரியர்கள், மண் உர மேலாண்மை மற்றும் மண்ணில் கார்பன்: நைட்ரஜன் விகிதம், மீன் வளர்ப்பிற்கு மிதவை உயிரினங்களின் முக்கியத்துவம், மண் மற்றும் நீர் தர மேலாண்மை போன்ற தலைப்புகளில் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்த 20 மீன் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.  நீர்வளச்சூழலியல் மேலாண்மைத்துறையின் உதவிப்பேராசிரியர் ராணி நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் மணிமேகலை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

Related Stories: