முள்ளக்காட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஸ்பிக்நகர், டிச.11: தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ரேஷன் கடை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளக்காடு ரேஷன் கடை அருகே கடந்த 1 மாதத்திற்கு மேலாக  குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது. இதன் அருகிலேயே முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ளது. இருப்பினும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெளியேறி வரும் குடிநீரை அடைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைஇதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஞ்சாயத்து உதவியாளரிடம் சென்று பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இங்கிருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள மகளிர் மண்டபம் அருகில் சாக்கடை போல் தேங்கியுள்ளதால் கொசு அதிகளவில் காணப்படுகிறது. இதன் அருகிலேயே விஏஒ அலுவலகம், மழலை குழந்தைகள் பயிலும் பள்ளி, முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை உள்ளன. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: